இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

மோடி-ஜெர்மன் பிரதமர் சந்திப்பில் நேரு படமா?
மோடி-ஜெர்மன் பிரதமர் சந்திப்பில் ஜவஹர்லால் நேரு படம் இடம்பெற்றதாக பரவும் புகைப்படம் போலியானதாகும்.

இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்றாரா அமித் ஷா?
இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பட்டினப்பிரவேச பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று கூறினாரா தருமபுரம் ஆதீனம்?
பட்டினப்பிரவேச பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

தாத்தா ஆகவேண்டிய வயதில் தந்தை ஆனது உண்மைதான் என்று கூறினாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
தாத்தா ஆகவேண்டிய வயதில் தந்தை ஆனது உண்மைதான் என்று அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்றாரா ஹெச்.ராஜா?
வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்று ஹெச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)