இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

பேரறிவாளன் விடுதலையானதால் சுப்ரமணியன் சுவாமிக்கு மாரடைப்பு?
பேரறிவாளன் விடுதலையானதால் சுப்ரமணியன் சுவாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மருத்துவமனையில் மோசமான நிலையில் உள்ளதாகப் பரவும் பழைய புகைப்படம்!
முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மெலிந்த உடலுடன் மருத்துவமனையில் மோசமான நிலையில் உள்ளதாகப் பரவுகின்ற புகைப்படம் பழையதாகும்.

ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமா இது?
வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் வைரலாகும் படம் தவறானதாகும்.

பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை மகனின் பிறந்தநாள் எனப்பரவும் தவறான தகவல்!
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதாகப் பரவுகின்ற புகைப்படத் தகவல் தவறானதாகும்.

பாடகர் கோவனுக்கு புதுச்சேரியில் அடி, உதை என்பதாகப் பரவிய போலி நியூஸ்கார்டு!
பாடகர் மற்றும் சமூக ஆர்வலரான கோவனுக்கு புதுச்சேரி மதுபானக் கடை ஒன்றில் அடி, உதை என்பதாகப் பரவிய நியூஸ்கார்டு போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)