Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்கும் வீடியோ 2024 பொதுத்தேர்தலில் எடுக்கப்பட்டதா?
கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்டதாக பரவும் வீடியோ 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.

தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் இடிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?
தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் தமிழக அரசால் இடிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை என்றாரா ராகுல் காந்தி?
வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

கேரளாவில் ராகுல் காந்தி பங்கேற்ற ரோடு ஷோவில் முஸ்லீம் லீக் கொடிகள் என்று பரவும் 2016ஆம் ஆண்டு புகைப்படம்!
கேரளாவில் ராகுல் காந்தி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் முஸ்லீம் லீக் கொடிகள் என்று பரவும் புகைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

தோனி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கூறினாரா?
தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரளித்து கை சின்னத்தில் வாக்களிக்க கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)