Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

லண்டனில் பிபிசி வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை மக்கள் எதிர்த்த நிகழ்வா இது?
லண்டனில் பிபிசி வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை மக்கள் எதிர்த்த நிகழ்வு என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்தாரா?
பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

தமிழக தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் அடித்து விரட்டியதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?
தமிழக தொழிலாளர்களை வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் அடித்து விரட்டியதாகப் பரவுகின்ற தகவலின் பின்புலம் தவறானதாகும்.

தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா?
டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கவிருக்கும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

விஜய் பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை கொண்டாடியதாக பொய் செய்தி வெளியிட்ட தினமலர்!
பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை நடிகர் விஜய் கொண்டாடியதாக பரவும் பத்திரிக்கைச் செய்தி தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)