Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

சிதம்பரம் கோயில் கோபுர நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்ததா?
சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரம் ஒன்றில் அமைந்துள்ள
நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிந்ததாக பரவுகின்ற வீடியோ ஆதாரமற்றது
ஆகும்.

பீகார் தேர்தலில் இ.வி.எம் மெஷினை பாஜக இளைஞர் ஒருவர் ஹேக் செய்ததாக வதந்தி
பீகார் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பாஜக இளைஞர்
ஒருவர் ஹேக் செய்ய முயன்றபோது பிடிப்பட்டார் என்று பரவும் வீடியோ
தவறானதாகும்.

வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர்கள் மத்திய பிரதேச இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவரது தந்தையுமா?
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியான பெண்
ஒருவர், லாரி டிரைவரான தனது தந்தையை விமானத்தில் அழைத்துச் செல்கிறார்
எனப் பரவும் புகைப்படம் தவறான தகவலைப் பரப்புகிறது.

மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா?
மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா அவர்கள் கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இதுத் தவறானத் தகவலாகும்.

இந்து விரோதிகளின் கூடாரம் என்று தமிழ்நாட்டை விமர்சித்தாரா யோகி ஆதித்யநாத்?
தமிழ்நாட்டை இந்து விரோதிகளின் கூடாரம் என்று யோகி ஆதித்யநாத் விமர்சித்ததாக TN NEWS 24-ன் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.ஆனால் இதுத் தவறானத் தகவலாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)