Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினரா?
இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இஸ்ரேல் பெண் பேட்டி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அவரது சிறு குழந்தையின் மாமிசத்தை சாப்பிட வைக்கப்பட்ட பெண்ணின் பேட்டி என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

காஸா முஸ்லீம்கள் எகிப்துக்குள் நுழைய முயற்சிப்பதாக பரவும் தவறான படம்!
காஸா முஸ்லீம்கள் எகிப்துக்குள் நுழைய முயற்சிப்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்ததாக பரவும் தவறான வீடியோ!
பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்ததாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் சிரியா வீடியோ!
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)