Ramkumar Kaliamurthy
-

முகேஷ் அம்பானியின் பேரனைச் சந்தித்தாரா மோடி?
முகேஷ் அம்பானிக்கு புதிதாகப் பிறந்துள்ள பேரப்பிள்ளையைக் காண மோடி அவர்கள் மருத்துவமனைக்கு சென்றதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification புதிதாக ஏற்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்காண விவசாயிகள், தலைநகர் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்துப் போராடி வருகின்றனர். இப்போராட்டம் தொடங்கி ஏறக்குறைய 20 நாட்கள் ஆகியும், மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இசைந்து, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்…
-

லவ் ஜிஹாத் தடை சட்டம் காரணமாக கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசு கலைக்கப்பட்டதா?
லவ் ஜிஹாத் தடைச் சட்டத்தில் கைதான மூன்று மாத கர்ப்பிணி பெண்ணின் கரு, விஷ ஊசி மூலம் கலைக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் விக்ரமன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். Fact Check/ Verification உத்திரப் பிரதேசத்தில் லவ் ஜிஹாத் காரணமாக கட்டாய மதமாற்றம் செய்வதைத் தடை செய்யும் விதமாக கடந்த மாதம் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. யாரேனும் கட்டாயப்படுத்தியோ அல்லது நேர்மையற்ற முறையிலோ மத மாற்றம் செய்தால், அவர்களுக்கு இச்சட்டத்தின் அடிப்படையில் 10 ஆண்டுகள் வரை…
-

தமிழக சட்டமன்றத்தின் பரப்பளவு 12 ஆயிரம் சதுர மீட்டரா?
தமிழக சட்டமன்றத்தின் பரப்பளவு 12 ஆயிரம் சதுர மீட்டர் என்றும், அதன் கட்டுமானச் செலவு 465 கோடி என்றும் கூறி பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. Fact Check/ Verification டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட கடந்த வியாழன்(09/12/2020) அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போதைய நாடாளுமன்றம், அரசு அலுவலக கட்டிடங்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.20 ஆயிரம்…
-

டிக்டாக் சூர்யா கைதுக்கு காரணம் பாஜகவில் சேராததா?
“பாஜகவில் சேர தயக்கம் காட்டியதால்தான் நான் கைது செய்யப்பட்டேன்” என்று டிக்டாக் பிரபலம் சூர்யா கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சியின் புகைப்பட செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification டிக்டாக்கில் ரவடி பேபி சூர்யா எனும் பெயரில் பிரபலமானவர் சுப்புலட்சுமி. இவர் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியக் குற்றத்திற்காக திருச்சி மாநகர விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கடந்த புதன்கிழமை (09/12/2020) அன்று கைது செய்யப்பட்டார். இதுக்குறித்த…
-

ஜஸ்டின் ட்ரூடோ விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்டாரா?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பல லட்சம் விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்துப் போராடி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது ஆதரவைத் தெரிவித்தார். இதற்கு இந்தியத் தரப்பில், ”இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டு தலைவர்கள் தவறான…
-

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு தடையா?
சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்ததாக திருமாவளவன் கூறியுள்ளார். Fact Check/ Verification மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் சேலம்-சென்னைக்கு இடையே பத்தாயிரம் கோடி செலவில் எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டங்கள் வெடித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏறக்குறைய 89 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்கள் வருவாய் நிலங்களாக வகை மாற்றம் செய்யப்பட்டதாக…
-

ஊட்டி மலை ரயில் தனியார் வசமானதாக வதந்தி
ஊட்டி மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. Fact Check/ Verification ஊட்டி தமிழகச் சுற்றுலாத் தலங்களில் குறிப்பிடத்தக்கது. அதிலும் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி மலைக்குச் செல்லும் நீராவி ரயில் ஊட்டியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது. கொரானாக் காரணமாக இந்த ரயிலின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த ரயில் சேவை தனியார்க்கு தாரை வார்க்கப்பட்டதாகவும், இந்த ரயிலில் பயணம் செய்ய ரூ.3000 டிக்கெட் கட்டணமாக…
-

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பணம் கொடுத்து ஆள் சேர்க்கப்படுகிறதா?
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தில் நபர் ஒருவருக்கு ரூ.350 கொடுத்து ஆள் சேர்க்கப்படுவதாக கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. Fact Check/ Verification புதிதாக கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டமானது ஏறக்குறைய இரணடு வாரங்களாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் இப்போராட்டம் குறித்து பலரும் பல கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அவ்வகையில் இப்போராட்டத்தில்…